Saturday, February 24, 2024

OrangeScape கணினி மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர், Kissflow நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி, கனவு தமிழ்நாடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. சுரேஷ் சம்பந்தம் அவர்களுடன் முனைவர் எச். கார்த்திபன்

OrangeScape கணினி மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர், Kissflow நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி, கனவு தமிழ்நாடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. சுரேஷ் சம்பந்தம் அவர்களுடன் எனது புத்தகம் “உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி?” (How to Save Your Important Digital Documents?) குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டேன்.




Friday, February 23, 2024

தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் சுபாஷினி அவர்களுடன் முனைவர் எச். கார்த்திபன்

    ண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற பதிப்பாளர்கள் எழுத்தாளர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கில் எனது புத்தகம் “உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி?” (How to Save Your Important Digital Documents?) குறித்த தகவல்களைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் Subashini Thf அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். டிஜிட்டல் ஆவணப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடையே உள்ளதா? என்ற கேள்வியை என்னிடம் எழுப்பினார். பொதுவாக மாணவர்கள் டிஜிட்டல் விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கில் மட்டுமே அதிகமாக ஆர்வம் செலுத்துகிறார்கள் என்ற எனது கருத்தைத் தெரிவித்தேன். நாம் பள்ளி, கல்லூரிகளை அணுகி டிஜிட்டல் ஆவணப் பாதுகாப்பு குறித்தும், டிஜிட்டல் நுட்பங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தவும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்ற ஆலோசனையை வழங்கினார்.




தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் அவ்வை ந. அருள் அய்யா அவர்களுடன் முனைவர் எச். கார்த்திபன்

    ண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற பதிப்பாளர்கள் எழுத்தாளர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கில் கலந்துகொண்டேன். எனது புத்தகம் “உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி?” (How to Save Your Important Digital Documents?) குறித்த தகவல்களைத் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் அவ்வை ந. அருள் அய்யா அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். இந்தப் புத்தகத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்திற்கு அனுப்பி வைக்குமாறு கூறினார்.

முனைவர் அவ்வை ந. அருள் அய்யா அவர்களுக்கு நன்றி





Tuesday, February 13, 2024

கணித்தமிழ் 24 மாநாடு – வெளியீடுகள் : KaniTamil 2024 Conference Publications

கணித்தமிழ் 24 மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள்,சிறப்பு மலரை கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

கணிக்கோவை – கணித்தமிழ்24 மாநாட்டுக் கட்டுரைகள்.

கணித்தொகை – பன்னாட்டுக் கணித்தமிழ் 24 மாநாடு சிறப்பு மலர்

  1. #KaniTamil2024,#TamilResearch,TamilConference,#TamilScholars,#TamilStudies,#TamilCulture,#ResearchPublication,#AcademicConference,#ScholarlyArticles,#TamilLanguage,#LanguageResearch, #CulturalStudies,#ConferenceProceedings,#AcademicCommunity,#KnowledgeExchange,#TamilHeritage,#ResearchCommunity,#TamilLiterature,#LinguisticStudies, #DigitalPublication
  2. #Free Tamil E-Books PDF








Monday, January 22, 2024

இயக்குநர் திரு. பா. இரஞ்சித் சார் அவர்களுடன் முனைவர் எச். கார்த்திபன்


சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எனது புத்தகம் குறித்த தகவல்களை இயக்குநர் திரு. பா. இரஞ்சித் சார் அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.




#cbf_2024 #ChennaiBookFair2024#bookfair2023#internationalbookfair #சென்னைபுத்தகக்கண்காட்சி #padaippumedai#படைப்பு#padaippu #howtosaveyourimportantpersonaldigitaldocuments? #உங்களின்முக்கியடிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி?#karthiban#கார்த்திபன்#hkarthiban#drhhkarthiban
 

Friday, January 12, 2024

உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி? (How to Save Your Important Personal Digital Documents?)

 நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில், தேடிவந்து எனது புத்தகத்தை வாங்கி வருகிறார்கள் பல குறிப்பிடத்தக்க ஆளுமைகள்.

எனது புத்தகத்திற்குச் சிறந்த வரவேற்பை அளித்துவரும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

இப்பொழுது பரபரப்பான விற்பனையில்!

எனது புத்தகம் "உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி? (How to Save Your Important Personal Digital Documents?)"

முகநூல் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram ), ட்விட்டர் (Twitter) போன்ற சமூக வலைத்தளங்களில் நீங்கள் பகிர்ந்த தரவுகளை நீங்களே தொகுத்து புத்தகமாக உருவாக்கவும் தமிழில், எளியமுறையில் வழிகாட்டும் புத்தகம்.

புத்தகத்தைப் படித்துப் பயனடையுங்கள்,

உங்கள் அன்புக்கு உரியவர்களுக்கு இந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்துங்கள்.

பரிசளிக்க!

பாதுகாக்கப்பட வேண்டிய அரிய ஆவணம் இந்தப் புத்தகம்!!

சலுகை விலை Rs.180/-

சென்னை புத்தகக் கண்காட்சியில், கீழ்காணும் அரங்குகளில் கிடைக்கும்.

அரங்கு எண்: 591, யாளி கலைப் பண்பாட்டு ஆய்வு மையம்

அரங்கு எண்: 519, WE CAN BOOKS

All reactions:
Sri N Srivatsa, Rajadoss and 6 others

உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி? (How to Save Your Important Personal Digital Documents?)

 தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர், ஓவியர். கலைவிமர்சகர் விட்டல் ராவ் அய்யா அவர்கள் எனது புத்தகத்தை வாங்கிய போது...

வரலாற்றின் மீது தீவிர ஈடுபாடு கொண்ட இவர் சென்னை மூர் மார்க்கெட் மற்றும் சென்னையின் புரதான கட்டிடங்கள் குறித்துப் பல தகவல்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

தேர்ந்த சொற்களைக் கொண்டு சரளமான நடையில், சுவாரசியமாக எழுதுவது குறித்துப் பல குறிப்புகளை அன்புடன் பகிர்ந்தார். நீங்கள் நிறைய புத்தகங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்று வாழ்த்தினார்.

நன்றி திரு. விட்டல் ராவ் அய்யா அவர்களுக்கு,



May be an image of 2 people and text