Thursday, September 5, 2024

சந்தைப்படுத்தலில் செயற்கை நுண்ணறிவு! (AI in Marketing)

'தி கோட்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் 'பேஸ் ஸ்வாப்' முறையை தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


இதன்மூலம், தந்தை விஜய் பைக் ஓட்ட, பின்னால் இளம் விஜய் இடத்தில் ரசிகர்கள் தங்கள் முகத்தைப் பொருத்திக் கொள்ளலாம்.

பதிவில் உள்ள போஸ்டரில் எனது முகத்தைப் பொருத்தி உள்ளேன்.

ரசிகர்கள் அனைவரும் இந்த இணையதளத்தில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து பார்த்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.


ஏ.ஜி.எஸ். தயாரிப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் நீங்களும் இதைச் செய்து பார்க்கலாம்.



#GOAT Face Swap App, #GOAT Movie Face Swap Website, #AI in Marketing #GOAT Movie Face Swap #Click to Swap Your Face with Thalapathy Vijay’s Now!

#GOATCelebrationStarts #ThalapathyVijay #GOATMovie #FaceSwap #AIinMarketing #ViralMarketing #AGSEntertainment #VijayFans #AItechnology #MoviePromotion #MarketingStrategy #AItools #ThalapathyFans #DigitalMarketing #TamilCinema #ViralCampaign #MovieBuzz

 


GOAT Face Swap App | GOAT Movie Face Swap Website: AI in Marketing! GOAT Movie Face Swap: Click to Swap Your Face with Thalapathy Vijay’s Now!

Ready for a fun, AI-powered experience? Jump on board with G.O.A.T, the latest release from AGS Entertainment!

In a brilliant marketing move, AGS introduced a cool feature just yesterday—swap your face with Thalapathy Vijay's on the official movie poster! Using a simple AI tool, this idea has gone viral in no time.

Here’s why it worked:

  • Feel-good factor: Fans loved seeing themselves as Vijay, creating a personal connection with the movie.
  • Free promotion: The audience eagerly shared their creations, spreading the word organically.
I’ve even tried it myself—now, I'm in the poster with Thalapathy Vijay!

It’s a total win-win—simple, yet super effective!

Want to try it yourself? Click here to swap your face with Vijay’s on the poster and join the celebration!






#GOATCelebrationStarts #ThalapathyVijay #GOATMovie #FaceSwap #AIinMarketing #ViralMarketing #AGSEntertainment #VijayFans #AItechnology #MoviePromotion #MarketingStrategy #AItools #ThalapathyFans #DigitalMarketing #TamilCinema #ViralCampaign #MovieBuzz

 


Sunday, September 1, 2024

பழைய - குடிமைக் கடனாளிகளின் சிறை (OLD – CIVIL DEBTOR'S JAIL) – வடசென்னை

டசென்னைப் பகுதியில் கடனாளிகளை அடைத்து வைக்கும் ஒரு சிறை இருந்தது? உங்களுக்குத் தெரியுமா?

பழமையான வடசென்னைப் பகுதியில், நம்மில் பலருக்குத் தெரியாத ஒரு வரலாற்றுச் சின்னம் உள்ளது. அது தான் பழைய கடனாளிகள் சிறை (OLD – CIVIL DEBTOR'S JAIL). இந்த அரிய கட்டிடத்தின் கதை பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். அதன் சுவாரசியமான வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்வோம்.

1692-ல் கட்டப்பட்ட இந்தச் சிறை, கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாதவர்களை அடைக்கும் இடமாக இருந்துள்ளது. அக்காலத்தில் கடன் வாங்குவது ஒரு பெரும் ஆபத்தான செயல் என்பதை இது காட்டுகிறது.

1793-ல் இந்த வளாகம் விரிவடைந்து, இன்று நாம் அனைவரும் அறியும் பாரதி மகளிர் கல்லூரியின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.

சுதந்திரத்திற்குப் பின், இந்தக் கட்டிடம் பல மாற்றங்களை அடைந்துள்ளது. முதலில் குடிசைத் தொழில் பயிற்சி மையமாகவும், பின்னர் மத்திய பாலிடெக்னிக் நிறுவனமாகவும் மாறியுள்ளது. 1964-ல் இது கலைக் கல்லூரியாக மாறி, இன்று பாரதி மகளிர் கல்லூரி என அழைக்கப்படுகிறது.

கல்லூரி வளாகத்தில் நிற்கும் சிதைந்த கட்டிடம், அதன் பழைய நாட்களின் நினைவூட்டலாக உள்ளது. உயர்ந்த கோட்டைச் சுவர்களுக்குள் அமைந்த நீண்ட கட்டிடம், அதன் தெற்குப் பக்கத்தில் உள்ள உயர்ந்த நுழைவாயில், படிக்கட்டுகள் - இவை அனைத்தும் அதன் முந்தைய பயன்பாட்டைக் காட்டுகின்றன.

சௌல்ட்ரி நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். கடுமையான குற்றவாளிகளுக்கான இருண்ட அறை, ஒரே ஒரு கழிவறை - இவை அனைத்தும் அந்தக் காலத்தின் கடுமையான சிறைச் சூழலை நமக்கு உணர்த்துகின்றன.

சுவாரசியமாக, 1964 முதல் 2004 வரை இதே அறைகள் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பறைகளாகப் பயன்பட்டுள்ளன. ஒரு காலத்தில் கைதிகளை அடைத்து வைத்த இடம், பின்னர் அறிவைப் பரப்பும் இடமாக மாறியுள்ளது!

இன்றும் வடசென்னை மின்ட் பேருந்து நிலையத்தில் இருந்து பாரதி மகளிர் கல்லூரி வரை செல்லும் சாலை "பழைய சிறைச்சாலை சாலை" என்று பெயர்ப் பலகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 நண்பர்களே!

பழைய - குடிமைக் கடனாளிகளின் சிறை (OLD – CIVIL DEBTOR'S JAIL) குறித்து நீங்கள் அறிந்த சுவாரசியமான தகவல்களைப் பகிருங்கள்.

Dr. எச். கார்த்திபன்


#வடசென்னை #NorthChennai #கருப்புநகரம் #BlackTown #ஜார்ஜ்டவுன் #GeorgeTown #வரலாற்றுச்சின்னம் #HistoricalMonument #நினைவுச்சின்னங்கள் #Monuments #பாரதிமகளிர்கல்லூரி #BharathiWomensCollege #சென்னைவரலாறு #ChennaiHistory #பழையசிறை #OldJail #CivilDebtorsJail #HeritageBuilding #ChennaiHeritage #DiscoverChennai #சென்னைவரலாற்றுஇடம் #ChennaiHistoricalPlace #பிரிட்டிஷ்காலனித்துவம் #BritishColonialism #கருப்புநகரத்தில்பிரிட்டிஷ்ஆட்சி #BritishRuleInBlackTown #தமிழ்நாடுவரலாறு #TamilNaduHistory #இந்தியவரலாறு #IndianHistory #பாரம்பரியபாதுகாப்பு #HeritageConservation

Friday, August 23, 2024

உ.வே. சாமிநாதையர் நூலகம் (U.V. Swaminatha Iyer Library), பெசன்ட் நகர், சென்னை

நண்பர்கள் அனைவருக்கும் சென்னை தின வாழ்த்துகள்!

சென்னையில் எனக்குப் பிடித்த நூலகங்களுள் ஒன்று உ.வே. சாமிநாதையர் நூலகம் (U.V. Swaminatha Iyer Library).

2007-ஆம் ஆண்டில் உ.வே. சாமிநாதையர் நூலகத்தில் உள்ள அரிய புத்தகங்களைப் பட்டியலிட்டு ஆவணப்படுத்தும் பணியில் இருந்தேன். பழமையான புத்தகங்களைக் கையாள்வது ஒரு கலை. நான் ஆவணப்படுத்திய ஒவ்வொரு புத்தகமும் இப்பொழுதும் நினைவில் நிழலாடுகிறது. ஒவ்வொரு புத்தகத்தின் தகவல்களும் வரலாற்றுக் காலத்திற்குள் சஞ்சரிக்க வைத்துவிடும்.

அங்கிருந்த பெரும்பாலான பழைய புத்தகங்கள் பூச்சிகளால் தாக்கப்பட்டு, தூசி படிந்திருந்தன. ஆவணப்படுத்துவதற்கு முன் அவற்றைச் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. இப்புத்தகங்களைக் கையாளும்போது சுவாசக் கோளாறு, கண்களிலும் சருமத்திலும் எரிச்சல் போன்ற பல உபாதைகள் ஏற்பட்டன. எனினும், தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் அவர்களின் கரங்களில் தவழ்ந்த புத்தகங்களை எனது கரங்களால் தொட்டு ஆவணப்படுத்துகிறோம் என்ற பெருமகிழ்வும், ஆவணப்படுத்துதலில் எனக்கிருந்த அளவற்ற ஆர்வமும் இச்சிரமங்களைப் பொருட்படுத்தாமல் செய்தன.

இந்நூலகத்தின் இயற்கை கொஞ்சும் சூழல் எப்பொழுதும் புத்துணர்ச்சி கொடுத்துக் கொண்டே இருக்கும். இங்கிருக்கும் கடற்கரை மணலில் வெறுங்காலில் நடப்பது ஒரு சுக அனுபவம். நூலகத்தின் உள்ளே இருந்த ஒரு மரத்தில் செழுமையான வெற்றிலைக் கொடி பசுமையாகப் படர்ந்திருக்கும், இங்கிருக்கும் மணலை லேசாகத் தோண்டினால் நன்னாரி வேர்கள் படர்ந்து இருக்கும், அவற்றை எடுத்து தண்ணீர் பாட்டிலில் போட்டு வைத்து அந்த தண்ணீரைக் குடிப்போம் அற்புத சுவையாக இருக்கும்.

பண்டைய இலக்கியங்கள் எழுதப்பட்டிருந்த ஓலைச்சுவடிகளை ஊர் ஊராக அலைந்து சேகரித்து அச்சிட்டுப் பதிப்பித்து தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும் செழுமையையும் அறியச் செய்தவர் தமிழ் தாத்தா உ. வே. சாமிநாதையர்.

இந்நூலகத்தில் புத்தகங்கள் மட்டுமின்றி செவ்வியல் இலக்கிய சுவடிகள் சமய இலக்கிய சுவடிகள், ராமாயண சுவடிகள் ஓவிய சுவடிகள், என மூவாயிரத்திற்கும் மேலான சுவடிகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டு முதல் இன்று வரை உள்ள பல அரிய நூல்களின் சேமிப்பு கூடமாக இந்த நூலகம் விளங்குகிறது.

உ. வே. சாமிநாதையர் நூலகம் பெசன்ட் நகரில் உள்ள அருண்டேல் கடற்கரைச் சாலை தி பெசன்ட் தியோசாபிகல் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ளது.

இந்நூலகம் குறித்த உங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிருங்கள்!








Tuesday, August 20, 2024

எலும்புகளை வலுவாக்கும் முருங்கை கஞ்சி!

இரண்டு மூன்று கட்டு முருங்கை கீரை இலைகளை கழுவி எடுத்து ,

 மிக்ஸியில் அரைத்து சாறாக்கி,

 அந்த சாறு இரண்டு லிட்டர் சாறு இருக்கிறது என்றால்,

 அதில் ,

ஒரு கிலோ பச்சரிசியை அதில் சேர்த்து,

 அதில்,

ஐம்பது கிராம் மிளகையும் சேர்த்து,

 கூடவே ,

இருநூறு கிராம் பாசிபருப்பு சேர்த்து,

 சிறிது,

சுக்கு ,மற்றும்

ஏலக்காய் சேர்த்து வெயிலில் காயவைக்கவேண்டும்....!!

 அரிசியில் முருங்கை சாறு நன்றாக ஊறிவிடும்...!!

 அதனை மறுபடியும் நன்றாக ஈரப்பதம் போகும் வரை காயவைத்து,

 சிறு குருணையாக பொடித்து வைத்துக் கொள்ளவேண்டும்.

 அதனை ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தி,

தினந்தோறும் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் முருங்கை அரிசி குருணையை ,

 கஞ்சியாக செய்து சிறிது கல் உப்பு சேர்த்து குடிக்கவும்...!!

 இந்தக் கஞ்சியை காலை இரவு என்று இரண்டு வேளையும் சாப்பிடலாம்.

 அல்லது காலையில் மட்டும் குடிக்கலாம்....!!

 இந்த கஞ்சி முதுகெலும்பை வலுப்படுத்துகிறது....!!

L4, L5 இன்று நிறைய நபர்களுக்குத் தேய்ந்து போய் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

 பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்தது என்றால் L4, L5 தேய்ந்து போகிறது.

 இருசக்கர வாகனங்கள் அதிகம் பயன்படுத்துவோர்க்கு L4, L5 தேய்ந்து போகிறது.

 அந்த L4, L5 தேய்ந்து போய்விட்டது என்றால் ,

 உட்கார முடியாத நிலை , முதுகு வலி, இடுப்புவலி உண்டாகும்.

 அந்தமாதிரி L4, L5 தேய்ந்து போவது,

 L4, L5 என்று சொல்லக்கூடிய முதுகெலும்பில் இருக்கக்கூடிய,

 " disc prolapse " ஆவது ...

 இவை அனைத்துக்குமே ஒரு முழுமையான மருந்து

முருங்கைக்கீரைதான் ....!!

 அதிக இரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து

 கொண்டுள்ள இந்த

முருங்கைக்கீரைக் கஞ்சியை

 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வரவேண்டும்..!!

 இவ்வாறு சாப்பிட்டு வந்தால்,

 உங்களுடைய முதுகு எலும்பு வலுவாகும்.

 இடுப்பு வலி, முதுகு வலி குணமாகிவிடும்...!!

Tuesday, April 9, 2024

Open Source for Digital Communication & Learning Objects Subtitle:Live Streaming, Podcasting, and Video Editing

Explore the world of digital communication and learning objects in "Open Source for Digital Communication & Learning Objects: Live Streaming, Podcasting, and Video Editing." Access the book via the link provided below.

https://ecampusontario.pressbooks.pub/osdigcomm/front-matter/introduction/

சோவியத் ரஷ்யா பதிப்பக மின்னூல்கள் வெளியீடு - Tamil Soviet Collection

1960 முதல் 1990 வரை சோவியத் ரஷ்யாவில் இருந்து பல்வேறு பதிப்பகங்கள் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில், அறிவியல், அரசியல், இலக்கியம், சிறார் இலக்கியம் எனப் பல்துறைகளில் பல நூல்களை வெளியிட்டன.

மிர் பதிப்பகம், ராதுகா பதிப்பகம், முன்னேற்றப் பதிப்பகம் ஆகிய பதிப்பகங்கள் அவற்றுள் முதன்மையானவை.

டொரண்டோ பல்கலைக் கழகம் ஸ்கார்புரோ வளாகத்தின் நூலகக் குழுவினர், சோவியத் நூல்களை  வெளியிடப்பட்டுள்ளனர். 

Tamil Soviet Collection

The Tamil Soviet Collection collects approximately 200 works published in the Soviet Union by Mir Publishers, Raduga Publishers, Progress Publishers and Soviet Foreign Languages Publishing House, on various subjects, including politics, science, Russian literature and children's literature

Please follow the link to access the books.