Showing posts with label Unique Information. Show all posts
Showing posts with label Unique Information. Show all posts

Wednesday, April 22, 2026

More Effort Won’t Fix a Broken System — Fix the Design Instead

Stuck in mud? Most organizations respond by adding more people instead of fixing the problem.

More effort ≠ better performance — it often creates complexity and delays.

The real issue is hidden bottlenecks, poor process design, and lack of clarity.
Smart leaders focus on systems thinking, productivity, and operational efficiency.
Fix the system, optimize workflow, and results will follow.


#Leadership #Productivity #BusinessStrategy #Management #SystemThinking #StartupGrowth #Entrepreneurship #OperationalExcellence #Innovation #WorkSmart #ProcessImprovement #DigitalTransformation #Efficiency #ViralPost



Friday, August 23, 2024

உ.வே. சாமிநாதையர் நூலகம் (U.V. Swaminatha Iyer Library), பெசன்ட் நகர், சென்னை

நண்பர்கள் அனைவருக்கும் சென்னை தின வாழ்த்துகள்!

சென்னையில் எனக்குப் பிடித்த நூலகங்களுள் ஒன்று உ.வே. சாமிநாதையர் நூலகம் (U.V. Swaminatha Iyer Library).

2007-ஆம் ஆண்டில் உ.வே. சாமிநாதையர் நூலகத்தில் உள்ள அரிய புத்தகங்களைப் பட்டியலிட்டு ஆவணப்படுத்தும் பணியில் இருந்தேன். பழமையான புத்தகங்களைக் கையாள்வது ஒரு கலை. நான் ஆவணப்படுத்திய ஒவ்வொரு புத்தகமும் இப்பொழுதும் நினைவில் நிழலாடுகிறது. ஒவ்வொரு புத்தகத்தின் தகவல்களும் வரலாற்றுக் காலத்திற்குள் சஞ்சரிக்க வைத்துவிடும்.

அங்கிருந்த பெரும்பாலான பழைய புத்தகங்கள் பூச்சிகளால் தாக்கப்பட்டு, தூசி படிந்திருந்தன. ஆவணப்படுத்துவதற்கு முன் அவற்றைச் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. இப்புத்தகங்களைக் கையாளும்போது சுவாசக் கோளாறு, கண்களிலும் சருமத்திலும் எரிச்சல் போன்ற பல உபாதைகள் ஏற்பட்டன. எனினும், தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் அவர்களின் கரங்களில் தவழ்ந்த புத்தகங்களை எனது கரங்களால் தொட்டு ஆவணப்படுத்துகிறோம் என்ற பெருமகிழ்வும், ஆவணப்படுத்துதலில் எனக்கிருந்த அளவற்ற ஆர்வமும் இச்சிரமங்களைப் பொருட்படுத்தாமல் செய்தன.

இந்நூலகத்தின் இயற்கை கொஞ்சும் சூழல் எப்பொழுதும் புத்துணர்ச்சி கொடுத்துக் கொண்டே இருக்கும். இங்கிருக்கும் கடற்கரை மணலில் வெறுங்காலில் நடப்பது ஒரு சுக அனுபவம். நூலகத்தின் உள்ளே இருந்த ஒரு மரத்தில் செழுமையான வெற்றிலைக் கொடி பசுமையாகப் படர்ந்திருக்கும், இங்கிருக்கும் மணலை லேசாகத் தோண்டினால் நன்னாரி வேர்கள் படர்ந்து இருக்கும், அவற்றை எடுத்து தண்ணீர் பாட்டிலில் போட்டு வைத்து அந்த தண்ணீரைக் குடிப்போம் அற்புத சுவையாக இருக்கும்.

பண்டைய இலக்கியங்கள் எழுதப்பட்டிருந்த ஓலைச்சுவடிகளை ஊர் ஊராக அலைந்து சேகரித்து அச்சிட்டுப் பதிப்பித்து தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும் செழுமையையும் அறியச் செய்தவர் தமிழ் தாத்தா உ. வே. சாமிநாதையர்.

இந்நூலகத்தில் புத்தகங்கள் மட்டுமின்றி செவ்வியல் இலக்கிய சுவடிகள் சமய இலக்கிய சுவடிகள், ராமாயண சுவடிகள் ஓவிய சுவடிகள், என மூவாயிரத்திற்கும் மேலான சுவடிகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டு முதல் இன்று வரை உள்ள பல அரிய நூல்களின் சேமிப்பு கூடமாக இந்த நூலகம் விளங்குகிறது.

உ. வே. சாமிநாதையர் நூலகம் பெசன்ட் நகரில் உள்ள அருண்டேல் கடற்கரைச் சாலை தி பெசன்ட் தியோசாபிகல் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ளது.

இந்நூலகம் குறித்த உங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிருங்கள்!








Tuesday, February 13, 2024

கணித்தமிழ் 24 மாநாடு – வெளியீடுகள் : KaniTamil 2024 Conference Publications

கணித்தமிழ் 24 மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள்,சிறப்பு மலரை கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

கணிக்கோவை – கணித்தமிழ்24 மாநாட்டுக் கட்டுரைகள்.

கணித்தொகை – பன்னாட்டுக் கணித்தமிழ் 24 மாநாடு சிறப்பு மலர்

  1. #KaniTamil2024,#TamilResearch,TamilConference,#TamilScholars,#TamilStudies,#TamilCulture,#ResearchPublication,#AcademicConference,#ScholarlyArticles,#TamilLanguage,#LanguageResearch, #CulturalStudies,#ConferenceProceedings,#AcademicCommunity,#KnowledgeExchange,#TamilHeritage,#ResearchCommunity,#TamilLiterature,#LinguisticStudies, #DigitalPublication
  2. #Free Tamil E-Books PDF








Monday, January 22, 2024

இயக்குநர் திரு. பா. இரஞ்சித் சார் அவர்களுடன் முனைவர் எச். கார்த்திபன்


சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எனது புத்தகம் குறித்த தகவல்களை இயக்குநர் திரு. பா. இரஞ்சித் சார் அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.




#cbf_2024 #ChennaiBookFair2024#bookfair2023#internationalbookfair #சென்னைபுத்தகக்கண்காட்சி #padaippumedai#படைப்பு#padaippu #howtosaveyourimportantpersonaldigitaldocuments? #உங்களின்முக்கியடிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி?#karthiban#கார்த்திபன்#hkarthiban#drhhkarthiban
 

Friday, January 12, 2024

உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி? (How to Save Your Important Personal Digital Documents?)

 தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர், ஓவியர். கலைவிமர்சகர் விட்டல் ராவ் அய்யா அவர்கள் எனது புத்தகத்தை வாங்கிய போது...

வரலாற்றின் மீது தீவிர ஈடுபாடு கொண்ட இவர் சென்னை மூர் மார்க்கெட் மற்றும் சென்னையின் புரதான கட்டிடங்கள் குறித்துப் பல தகவல்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

தேர்ந்த சொற்களைக் கொண்டு சரளமான நடையில், சுவாரசியமாக எழுதுவது குறித்துப் பல குறிப்புகளை அன்புடன் பகிர்ந்தார். நீங்கள் நிறைய புத்தகங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்று வாழ்த்தினார்.

நன்றி திரு. விட்டல் ராவ் அய்யா அவர்களுக்கு,



May be an image of 2 people and text

Thursday, January 11, 2024

“உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி?” (How to Save Your Important Personal Digital Documents?)

கணினி (Computer)  மற்றும் திறன்பேசி (Smartphone) பயன்படுத்தும் ஒவ்வொருவரிடமும் அவசியம் இருக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம். இப்பொழுது பரபரப்பான விற்பனையில்!

 §  நீங்கள் தினமும் கணினி (Computer)  மற்றும் திறன்பேசி (Smartphone) – ல் டிஜிட்டல் வடிவில் நீங்கள் பயன்படுத்தும் உங்களின் முக்கிய ஆவணங்களான Personal Documents, Photographs, Audios, Videos, Email, Websites, Blogs and Social Media போன்றவற்றை எளிய முறையில் பாதுகாப்பது எப்படி?

 §  முகநூல் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram), ட்விட்டர் (Twitter) போன்ற சமூக வலைத்தளங்களில் நீங்கள் பகிர்ந்த தரவுகளை நீங்களே தொகுத்து புத்தகமாக உருவாக்குவது  எப்படி?

 §  மொபைல் போனில் உள்ள உங்களின் உள்ளடக்கம் மற்றும் தரவுகளைக் காப்புப்பிரதி எடுப்பது எப்படி? (How to Back up your Content & Data from Mobile Phone?)

 §  உங்களின்  மொபைல் போன் தொடர்பு எண்களை இழக்காமல் சேமித்து வைப்பது எப்படி? (How to save contact numbers in your mobile phone without losing it?)

 §  தொலைந்த மொபைல் போனைக் கண்காணித்து  மீட்பது எப்படி? (How to track and recover a lost mobile phone?)

 §  உங்களின் மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டரை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி? (How to use your Mobile Phone and Computer Safely?)

போன்றவை குறித்து தமிழில், எளியமுறையில் வழிகாட்டும்  பொருட்டு தொழில்முறைத் தகவல் அறிவியல் துறை வல்லுநர் எழுதிய புத்தகம்.

 புத்தகத்தைப் படித்துப் பயனடையுங்கள்

 உங்கள் அன்புக்கு உரியவர்களுக்கு இந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்துங்கள்.

 பரிசளிக்க!

 பாதுகாக்கப்பட வேண்டிய அரிய ஆவணம் இந்தப் புத்தகம்!!

 புத்தகத்தின் விலை: Rs.200/- + தபால் செலவு

சென்னைப் புத்தகக் கண்காட்சியில்  "யாளி கலைப் பண்பாட்டு மையம்", அரங்கு எண்: 591  (வாயில் 9)-ல்  புத்தகம் கிடைக்கும்.





 

இந்திரன் மனித நூலகம் : Indran Human Library

வாழ்நாள் முழுவதும் தொடர் கற்றலில் பேரார்வம் கொண்ட இந்திரன் அய்யா அவர்கள் வாசிப்பினால் உருவாக்கப்பட்ட மனிதர். மனித நூலகமாக எனக்கு எப்பொழுதும் பிரமிப்பை அளிப்பவர்.


இந்திரன் அய்யா அவர்களை மனித நூலகமாகப் பயன்படுத்தி அவரின் அனுபவங்களையும், அவர் கற்ற, பெற்ற தனித்துவமான அரிய தகவல்களையும் அவரிடமிருந்து அவரின் மொழியிலேயே கேட்டுப் பதிவு செய்து அனுபவ ஆவணமாகத் தொகுத்துக் கொண்டுவர வாய்ப்பளித்த திரு. இந்திரன் அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

அன்புடன்
முனைவர் எச். கார்த்திபன்

#HumanLibrary#HumanLibraryBook#Indran#IndranRajendran#ChennaiBookFair202#AuthorIndran#Storytelling#ChennaiBookScene#BookCommunity#ChennaiLiterature#MustRead2024#BookLvers#HumanLibraryExperience#cbf_2024 #ChennaiBookFair2024#bookfair2023#internationalbookfair #சென்னைபுத்தகக்கண்காட்சி #padaippumedai#படைப்பு#padaippu #karthiban#கார்த்திபன்#hkarthiban#drhhkarthiban




Wednesday, April 12, 2023

Are you a podcast lover looking for a convenient and user-friendly platform to listen to your favorite shows? Look no further than Google Podcasts.

Are you a podcast lover looking for a convenient and user-friendly platform to listen to your favorite shows? Look no further than Google Podcasts. With a vast collection of podcasts covering a range of topics, Google Podcasts is a great place to discover new shows and stay up-to-date with your favorite hosts. Its easy-to-use interface and personalized features make it a popular choice for podcast enthusiasts. In this blog post, we'll explore the many benefits of using Google Podcasts and how it can enhance your listening experience. 

https://podcasts.google.com/


Friday, November 20, 2015

Stereograph

Dear Friends, 

Interesting information that NYPL Labs which proud to brings us the Stereogranimator, a tool for transforming historical stereographs from The New York Public Library and other participating  organizations into shareable 3D web formats.



GIF made with the NYPL Labs Stereogranimator - view more at http://stereo.nypl.org/gallery/index

Thanks and Courtesy: Online Resources