Saturday, February 24, 2024

OrangeScape கணினி மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர், Kissflow நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி, கனவு தமிழ்நாடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. சுரேஷ் சம்பந்தம் அவர்களுடன் முனைவர் எச். கார்த்திபன்

OrangeScape கணினி மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர், Kissflow நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி, கனவு தமிழ்நாடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. சுரேஷ் சம்பந்தம் அவர்களுடன் எனது புத்தகம் “உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி?” (How to Save Your Important Digital Documents?) குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டேன்.




Friday, February 23, 2024

தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் சுபாஷினி அவர்களுடன் முனைவர் எச். கார்த்திபன்

    ண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற பதிப்பாளர்கள் எழுத்தாளர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கில் எனது புத்தகம் “உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி?” (How to Save Your Important Digital Documents?) குறித்த தகவல்களைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் Subashini Thf அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். டிஜிட்டல் ஆவணப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடையே உள்ளதா? என்ற கேள்வியை என்னிடம் எழுப்பினார். பொதுவாக மாணவர்கள் டிஜிட்டல் விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கில் மட்டுமே அதிகமாக ஆர்வம் செலுத்துகிறார்கள் என்ற எனது கருத்தைத் தெரிவித்தேன். நாம் பள்ளி, கல்லூரிகளை அணுகி டிஜிட்டல் ஆவணப் பாதுகாப்பு குறித்தும், டிஜிட்டல் நுட்பங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தவும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்ற ஆலோசனையை வழங்கினார்.




தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் அவ்வை ந. அருள் அய்யா அவர்களுடன் முனைவர் எச். கார்த்திபன்

    ண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற பதிப்பாளர்கள் எழுத்தாளர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கில் கலந்துகொண்டேன். எனது புத்தகம் “உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி?” (How to Save Your Important Digital Documents?) குறித்த தகவல்களைத் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் அவ்வை ந. அருள் அய்யா அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். இந்தப் புத்தகத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்திற்கு அனுப்பி வைக்குமாறு கூறினார்.

முனைவர் அவ்வை ந. அருள் அய்யா அவர்களுக்கு நன்றி





Tuesday, February 13, 2024

கணித்தமிழ் 24 மாநாடு – வெளியீடுகள் : KaniTamil 2024 Conference Publications

கணித்தமிழ் 24 மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள்,சிறப்பு மலரை கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

கணிக்கோவை – கணித்தமிழ்24 மாநாட்டுக் கட்டுரைகள்.

கணித்தொகை – பன்னாட்டுக் கணித்தமிழ் 24 மாநாடு சிறப்பு மலர்

  1. #KaniTamil2024,#TamilResearch,TamilConference,#TamilScholars,#TamilStudies,#TamilCulture,#ResearchPublication,#AcademicConference,#ScholarlyArticles,#TamilLanguage,#LanguageResearch, #CulturalStudies,#ConferenceProceedings,#AcademicCommunity,#KnowledgeExchange,#TamilHeritage,#ResearchCommunity,#TamilLiterature,#LinguisticStudies, #DigitalPublication
  2. #Free Tamil E-Books PDF