அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற பதிப்பாளர்கள் எழுத்தாளர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கில் எனது புத்தகம் “உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி?” (How to Save Your Important Digital Documents?) குறித்த தகவல்களைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் Subashini Thf அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். டிஜிட்டல் ஆவணப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடையே உள்ளதா? என்ற கேள்வியை என்னிடம் எழுப்பினார். பொதுவாக மாணவர்கள் டிஜிட்டல் விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கில் மட்டுமே அதிகமாக ஆர்வம் செலுத்துகிறார்கள் என்ற எனது கருத்தைத் தெரிவித்தேன். நாம் பள்ளி, கல்லூரிகளை அணுகி டிஜிட்டல் ஆவணப் பாதுகாப்பு குறித்தும், டிஜிட்டல் நுட்பங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தவும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்ற ஆலோசனையை வழங்கினார்.
No comments:
Post a Comment