Friday, August 23, 2024

உ.வே. சாமிநாதையர் நூலகம் (U.V. Swaminatha Iyer Library), பெசன்ட் நகர், சென்னை

நண்பர்கள் அனைவருக்கும் சென்னை தின வாழ்த்துகள்!

சென்னையில் எனக்குப் பிடித்த நூலகங்களுள் ஒன்று உ.வே. சாமிநாதையர் நூலகம் (U.V. Swaminatha Iyer Library).

2007-ஆம் ஆண்டில் உ.வே. சாமிநாதையர் நூலகத்தில் உள்ள அரிய புத்தகங்களைப் பட்டியலிட்டு ஆவணப்படுத்தும் பணியில் இருந்தேன். பழமையான புத்தகங்களைக் கையாள்வது ஒரு கலை. நான் ஆவணப்படுத்திய ஒவ்வொரு புத்தகமும் இப்பொழுதும் நினைவில் நிழலாடுகிறது. ஒவ்வொரு புத்தகத்தின் தகவல்களும் வரலாற்றுக் காலத்திற்குள் சஞ்சரிக்க வைத்துவிடும்.

அங்கிருந்த பெரும்பாலான பழைய புத்தகங்கள் பூச்சிகளால் தாக்கப்பட்டு, தூசி படிந்திருந்தன. ஆவணப்படுத்துவதற்கு முன் அவற்றைச் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. இப்புத்தகங்களைக் கையாளும்போது சுவாசக் கோளாறு, கண்களிலும் சருமத்திலும் எரிச்சல் போன்ற பல உபாதைகள் ஏற்பட்டன. எனினும், தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் அவர்களின் கரங்களில் தவழ்ந்த புத்தகங்களை எனது கரங்களால் தொட்டு ஆவணப்படுத்துகிறோம் என்ற பெருமகிழ்வும், ஆவணப்படுத்துதலில் எனக்கிருந்த அளவற்ற ஆர்வமும் இச்சிரமங்களைப் பொருட்படுத்தாமல் செய்தன.

இந்நூலகத்தின் இயற்கை கொஞ்சும் சூழல் எப்பொழுதும் புத்துணர்ச்சி கொடுத்துக் கொண்டே இருக்கும். இங்கிருக்கும் கடற்கரை மணலில் வெறுங்காலில் நடப்பது ஒரு சுக அனுபவம். நூலகத்தின் உள்ளே இருந்த ஒரு மரத்தில் செழுமையான வெற்றிலைக் கொடி பசுமையாகப் படர்ந்திருக்கும், இங்கிருக்கும் மணலை லேசாகத் தோண்டினால் நன்னாரி வேர்கள் படர்ந்து இருக்கும், அவற்றை எடுத்து தண்ணீர் பாட்டிலில் போட்டு வைத்து அந்த தண்ணீரைக் குடிப்போம் அற்புத சுவையாக இருக்கும்.

பண்டைய இலக்கியங்கள் எழுதப்பட்டிருந்த ஓலைச்சுவடிகளை ஊர் ஊராக அலைந்து சேகரித்து அச்சிட்டுப் பதிப்பித்து தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும் செழுமையையும் அறியச் செய்தவர் தமிழ் தாத்தா உ. வே. சாமிநாதையர்.

இந்நூலகத்தில் புத்தகங்கள் மட்டுமின்றி செவ்வியல் இலக்கிய சுவடிகள் சமய இலக்கிய சுவடிகள், ராமாயண சுவடிகள் ஓவிய சுவடிகள், என மூவாயிரத்திற்கும் மேலான சுவடிகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டு முதல் இன்று வரை உள்ள பல அரிய நூல்களின் சேமிப்பு கூடமாக இந்த நூலகம் விளங்குகிறது.

உ. வே. சாமிநாதையர் நூலகம் பெசன்ட் நகரில் உள்ள அருண்டேல் கடற்கரைச் சாலை தி பெசன்ட் தியோசாபிகல் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ளது.

இந்நூலகம் குறித்த உங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிருங்கள்!








Tuesday, August 20, 2024

எலும்புகளை வலுவாக்கும் முருங்கை கஞ்சி!

இரண்டு மூன்று கட்டு முருங்கை கீரை இலைகளை கழுவி எடுத்து ,

 மிக்ஸியில் அரைத்து சாறாக்கி,

 அந்த சாறு இரண்டு லிட்டர் சாறு இருக்கிறது என்றால்,

 அதில் ,

ஒரு கிலோ பச்சரிசியை அதில் சேர்த்து,

 அதில்,

ஐம்பது கிராம் மிளகையும் சேர்த்து,

 கூடவே ,

இருநூறு கிராம் பாசிபருப்பு சேர்த்து,

 சிறிது,

சுக்கு ,மற்றும்

ஏலக்காய் சேர்த்து வெயிலில் காயவைக்கவேண்டும்....!!

 அரிசியில் முருங்கை சாறு நன்றாக ஊறிவிடும்...!!

 அதனை மறுபடியும் நன்றாக ஈரப்பதம் போகும் வரை காயவைத்து,

 சிறு குருணையாக பொடித்து வைத்துக் கொள்ளவேண்டும்.

 அதனை ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தி,

தினந்தோறும் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் முருங்கை அரிசி குருணையை ,

 கஞ்சியாக செய்து சிறிது கல் உப்பு சேர்த்து குடிக்கவும்...!!

 இந்தக் கஞ்சியை காலை இரவு என்று இரண்டு வேளையும் சாப்பிடலாம்.

 அல்லது காலையில் மட்டும் குடிக்கலாம்....!!

 இந்த கஞ்சி முதுகெலும்பை வலுப்படுத்துகிறது....!!

L4, L5 இன்று நிறைய நபர்களுக்குத் தேய்ந்து போய் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

 பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்தது என்றால் L4, L5 தேய்ந்து போகிறது.

 இருசக்கர வாகனங்கள் அதிகம் பயன்படுத்துவோர்க்கு L4, L5 தேய்ந்து போகிறது.

 அந்த L4, L5 தேய்ந்து போய்விட்டது என்றால் ,

 உட்கார முடியாத நிலை , முதுகு வலி, இடுப்புவலி உண்டாகும்.

 அந்தமாதிரி L4, L5 தேய்ந்து போவது,

 L4, L5 என்று சொல்லக்கூடிய முதுகெலும்பில் இருக்கக்கூடிய,

 " disc prolapse " ஆவது ...

 இவை அனைத்துக்குமே ஒரு முழுமையான மருந்து

முருங்கைக்கீரைதான் ....!!

 அதிக இரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து

 கொண்டுள்ள இந்த

முருங்கைக்கீரைக் கஞ்சியை

 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வரவேண்டும்..!!

 இவ்வாறு சாப்பிட்டு வந்தால்,

 உங்களுடைய முதுகு எலும்பு வலுவாகும்.

 இடுப்பு வலி, முதுகு வலி குணமாகிவிடும்...!!