சாகித்ய அகாடமி விருது பெற்ற கரிசல் இலக்கியத்தின் தந்தை, தமிழின் ஆகச்சிறந்த கதைச் சொல்லி எழுத்தாளர் கி. ரா (கி. ராஜநாராயணன்) அய்யா அவர்கள் மூப்பின் காரணமாக திங்கட்கிழமை இரவு இயற்கை எய்தினார்.
1958-ல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.
அய்யா கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி."நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்" என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்வார். ஏழாம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற இவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகும் அளவிற்கு தானே ஒரு புத்தகம் ஆனார்.
No comments:
Post a Comment