தி.முக. தொடக்கம்
1949-ஆம் ஆண்டு,செப்டம்பர் 18-ம் நாள், சென்னை, ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, திமுகவின் தொடக்க விழாவுக்கு லட்சோபலட்ச தொண்டர்கள் கூடினர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளராக அண்ணா (கா. ந. அண்ணாதுரை) தேர்ந்தெடுக்கபட்டார். கலைஞர் அவர்கள் கழகத்தின் பொதுக்குழு மற்றும் பிரச்சாரக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
திமுக-கொடி, சின்னம்
நீண்ட சதுர வடிவத்தில் மேல் சரிபாதி கருப்பு நிறமாகவும், கீழ் சரிபாதி சிவப்பு நிறமாகவும் அமைந்துள்ளது.
கருப்பு: அரசியல் பொருளாதார சமுதாய வாழ்விலுள்ள இருண்ட நிலையை உணர்த்தி நிற்கும் அறிகுறியாகும்.
சிவப்பு: அம்மூன்று துறையிலும் உள்ள இருண்ட நிலையைப் போக்கி ஒளி நிலையை உண்டாக்க வேண்டும் என்பதைக் காட்டும் அறிகுறியாகும், இருண்ட நிலையையை அழித்துக் கொண்டு வரவேண்டும்.
No comments:
Post a Comment