Wednesday, May 12, 2021

யூனிட்டி ஹவுஸ்” சென்னை, பெரம்பூர் - “Unity House” Chennai, Perambur.

சென்னை, பெரம்பூர், சிறுவள்ளூர் சாலையில் அமைந்திருக்கிறது “யூனிட்டி ஹவுஸ்” ( தெற்கு ரயில்வே ஊழியர் சங்கம் - Southern Railway Employees’ Sangh).

தெற்கு ரயில்வே ஊழியர்களின் சங்கத்தின் இரண்டாவது வருடாந்திர மாநாடு 1927-ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்றது அந்த மாநாட்டில் ஸ்ரீ எஸ். சீனிவாச ஐயங்கார் தலைமை பதவிக்கும், ஸ்ரீ டி. கோலந்தாயுடன் யூனியன் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். யூனியன் அலுவலகத்திற்கு சொந்தமாக ஒரு கட்டிடம் வைத்திருப்பது அவசியமாக இருந்ததது அவர்களுக்கு.

தேசத்தந்தை மகாத்மா காந்தி 3-9-1927 அன்று மெட்ராஸுக்கு வந்தபோது, அவர் யூனியன் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்ட அழைக்கப்பட்டார். சி எஃப் ஆண்ட்ரூஸ், கே காமராஜ், கஸ்தூரிபாய் காந்தி மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் விழாவில் கலந்து கொண்டார்கள். பெரம்பூர் தொழிலாளர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான நாளாக இருந்தது. திருமதி. கஸ்தூரிபாய் காந்தி முதல் செங்கல்லை எடுத்து மகாத்மா காந்தியிடம் கொடுக்க அவர் அடிக்கல் நாட்டினார். யூனிட்டி ஹவுஸ்-ன் கட்டிட அமைப்பு காலனித்துவ பாணியை நெருக்கமாக ஒத்திருக்கிறது.
ஆச்சார்யா வினோபா பாவே, பி. ஆர். அம்பேத்கர், சி. சுப்பிரமணியன், ஆர்.வெங்கடராமன் மற்றும் எம். ஜி. ராமச்சந்திரன் ஆகிய பல பிரபல தலைவர்கள் இங்கு வந்துள்ளதாக கூறுகிறார்கள்.
#யூனிட்டி ஹவுஸ், #Unity House, #சென்னை, பெரம்பூர், #Chennai, #Perambur#சென்னை வரலாறு, #Historical Buildings, # Monuments in Chennai,#Karthiban Harikrishnan






No comments:

Post a Comment