"தமிழர் நாகரிகம் சோழ அரசர்களால் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்தது. தென்னிந்தியா முழுவதும் ஒரே ஆட்சிக்கு உட்பட்டுச் சுமார் முந்நூறு வருஷகாலம் ஒரே ராஜ்யமாக ஆளப்பட்டு வந்தது. நாடெங்கும் அமைதி நிலவியது. சிறியவும் பெரியவும் ஆன கற்கோயில்கள் கட்டப்பட்டன. அழகு வாய்ந்த சிற்பங்கள் அநேகம் கல்லில் செதுக்கப்பட்டன; வெண்கலத்திலும் வார்க்கப்பட்டன. நல்ல ஒவியங்கள் பல வரையப்பட்டன. கைத்தொழில்களும் வியாபாரமும் செழித்து வளர்ந்தன. ஜயங்கொண்டார், சேக்கிழார், கம்பர், ஒட்டக் கூத்தர் முதலிய பெரும் புலவர்கள் பலர் இனிய நூல்களை இயற்றித் தமிழைப் பெருக்கினார்கள். இம்மாதிரியான பல காரணங்கள் பற்றிச் சோழ அரசர்களின் மேன்மையும் பெருமையும் இந்தியா முழுவதுமின்றி, ஆசியாக்கண்ட முற்றிலுமே எல்லாரும் போற்றும்படி விளங்கின".
No comments:
Post a Comment