Friday, January 24, 2014

இன்று என்பதே நிஜம்!


ஒரு முறை ஜென் மாஸ்டர் தனது சீடர்களுக்கு "இன்று என்பது மட்டுமே நிஜம், நாளை என்பது மாயை. அதனால் எந்த ஒரு காரியத்தையும் நாளை செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடாமல், இப்பொழுதே செய்துவிட வேண்டும்" என்று அறிவுறுத்திக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஜப்பானீஸ் போர்வீரன், அந்த துறவியின் கூற்றை ஆழ்ந்து கேட்டுக் கொண்டிருந்தான். பின்பு ஒரு நாள் அந்த ஜப்பானீஸ் போர்வீரன் தனது எதிரிகளால் கைப்பற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். அன்றிரவு முழுவதும் அவனால் தூங்க முடியவில்லை. ஏனெனில், அடுத்த நாள் அவனுடைய எதிரிகள், அவனை எவ்வளவு துன்பம், சித்திரவதை மற்றும் விசாரணை செய்யப் போகிறார்களோ என்பது பற்றி யோசித்ததில் அவன் தூக்கம் கலைந்தது. பின் ஜென் மாஸ்டர் "நாளை என்பது மாயை, இன்று என்பது மட்டுமே நிஜம்" என்று கூறியதை நினைவில் கொண்டு, அவன் தன் மனதை திடப்படுத்திக் கொண்டு நிம்மதியான உறக்கம் கொண்டான். 


No comments:

Post a Comment