Wednesday, April 28, 2021

Computer based tool to create mind maps

 Following are the the few Computer based tool to create mind maps


MindMeister

iMindMap

SpiderScribe

XMind

Coggle


Thank and Courtesy: Books and Online Resources

பிரபஞ்சன் (சாரங்கபாணி வைத்தியலிங்கம்) (ஏப்ரல் 27, 1945 - திசம்பர் 21, 2018)

பிரபஞ்சன் (சாரங்கபாணி வைத்தியலிங்கம்) (ஏப்ரல் 27, 1945 - திசம்பர் 21, 2018)

திரு. பிரபஞ்சன் அவர்கள் சிறுகதை, புதினம் என்ற இரு இலக்கிய வகைகளிலும் மக்களறிந்த சிறந்த படைப்பாளிகளில் குறிப்பிடத் தகுந்தவர். சமூக விமர்சனக் கட்டுரைகளும் எழுதி வந்தவர், சிறந்த கதைசொல்லி. பாண்டிச்சேரியில் பிறந்தவர். தமிழில் புலவர் பட்டம் பெற்றவர். பாண்டிச்சேரியில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தபின் பட்டப் படிப்பைத் தஞ்சையில் பயின்றார். இவர் 1995 ஆம் ஆண்டு, தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். இன்று இவரின் பிறந்தநாள்.





Thanks and Courtesy: Books and Online Resources





Monday, April 19, 2021

இராமலிங்க சாமி கோயில் என்கிற திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் திருக்கோயில், வியாசர்பாடி, சென்னை.

திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் 1834-ஆம் ஆண்டு தன் பணிரெண்டாம் வயதில் பல மத சயத்தாரோடு சுத்த சன்மார்க்க பிரச்சாரம் வியாசர்பாடியில் செய்துவிட்டு இரவு நேரத்தில் வரும் பொழுது ஒரு பெரிய சர்ப்பம் வேகமாக வந்து இராமலிங்க அடிகளாரின் முன் படமெடுத்து ஆடியுள்ளது. அதைப் பாரத்த அன்பர்கள் அனைவரும் அது இராமலிங்க அடிகளாரை தீண்ட வருகிறது என்று என்னி அதை தாக்க முயற்ச்சித்துள்ளார்கள் ஆனால் இராமலிங்க அடிகளார் அவர்களைப் பார்த்து அது என்னைத் தீண்ட வரவில்லை அது முன் ஜென்மத்தில் செய்த பாவத்திற்காக மன்னிப்பு கேட்டு ஆன்ம பூரண சுகம் அடைய வந்துள்ளது என்று கூறியுள்ளார். அந்த சர்ப்பம் இராமலிங்க அடிகளாரின் திருவடியை மூன்று முறை வலம் வந்து புண்ணியம் பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு நடந்த இடத்திலதான் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் திருக்கோயில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயில் சென்னை தங்கசாலை (மிண்ட்) பேருந்து நிலையத்திலிருந்து வியாசர்பாடி செல்லும் வழியில், பேசின் பிரிட்ஜிலிருந்து இறங்கும் சாலையில், மேம்பாலத்திற்கு கீழே இடதுபுறம் செல்லும் சர்வீஸ் சாலையிலேயே அமைந்திருக்கின்றது.

#சென்னை, #வடசென்னை, #சென்னை வரலாறு #வியாசர்பாடி, #இராமலிங்க சாமி கோயில், #வள்ளலார், #இராமலிங்க சுவாமிகள், #சன்மார்க்கம், #சர்ப்பம், #பாம்பு


Thanks and Courtesy: Books and Online Resources

Saturday, April 17, 2021

கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலய விக்கிப்பீடியா பக்கம்

அன்புள்ள நண்பர்களுக்கு,

பெரும்பாலான மக்கள் அறிந்திராத சென்னையிலுள்ள கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயத்திற்கு ஒரு விக்கிப்பீடியா பக்கம் உருவாக்கி உள்ளேன் மேலும் தகவல்கள் கிடைத்தால் பக்கத்தில் சேர்க்கலாம்.


Thanks and Courtesy: Books and Online Resources


கோழி மார்கெட் என்கிற மஸ்கான்சாவடி சந்தை

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது என்பது தான் இந்த சந்தையின் அடையாளம்

.சென்னை, பிராட்வேயின் மத்தியில் இருக்கிறது அம்மன் கோவில் தெரு இதன் இரண்டு பிரதான தெருக்களை இணைக்கும் ஒற்றைச் சாலை தான் கோழி மார்கெட் என்று அழைக்கப்படுகிற மஸ்கான் சாவடி சந்தை. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி 12 மணிக்குள்ளாக பலர் இந்த தெருவில் கூடி பந்தயக்களுக்கென்றே பழக்கப்பட்ட ஓமர், சாதா, சப்ஷா, கிறிசில், ஆடல் புறாக்கள். பல வகை வகையான வளர்ப்புப் பறவைகள், வண்ண மீன்கள், கோழிகள், முயல்கள், கூண்டுகள், தீனிகள் போன்றவற்றை விற்பனை செய்கிறார்கள்.
பிரிட்டிஷ் காலத்தில், ஆங்கிலேயர்கள் தங்களின் கோழி இறைச்சி தேவைகளுக்காக இந்த சந்தையை உருவாக்கியிருக்கிறார்கள். சென்னையின் பல பகுதிகளிலிருந்து மக்கள் இந்த சந்தைக்கு வந்து கோழிகளை விற்றுச் செல்வார்களாம். கோழிச்சந்தையாக இருந்த இந்த சந்தை இப்போது வளர்ப்புப் பிராணிகள் சந்தையாக மாறியிருக்கிறது.
சென்னையில் பணிபுரிந்த சில ஆங்கிலேயே அதிகாரிகள், புறா வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்துள்ளார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பகுதிக்கு வந்து, புறாக்களை பறக்க விட்டு பந்தயம் நடத்தியிருக்கிறார்கள். அதைப் பார்த்து அப்பகுதி மக்களும் புறாவுக்கு ரசிகர்கள் ஆகி இருக்கிறார்கள். இன்றும், வடசென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது புறா வளர்ப்பும், பந்தயமும்.
#சென்னை, #வடசென்னை, #சென்னை வரலாறு #பிராட்வே, மன்னடி#கோழி மார்கெட், #மஸ்கான்சாவடி சந்தை, #பழமையான மார்கெட், #செல்லப்பிராணிகள் #புறா பந்தயம்.








Thanks and Courtesy: Books and Online Resources


தங்கசாலை தெரு என்கிற மிண்ட் ஸ்ட்ரீட்

சில தினங்களுக்குமுன் சென்னையிலுள்ள மிண்ட் ஸ்ட்ரீட்’ என்று அழைக்கப்படும் தங்கசாலை தெருவிற்கு செல்ல நேர்ந்தது. மிண்ட் ஸ்ட்ரீட், பழைய ஜெயில் சாலையில் துவங்கி, சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு அருகிலுள்ள பார்க் டவுனில் வரை நீண்டிருக்கும் சென்னையின் பழமையான மற்றும் மிக நீளமான தெரு.

தங்கசாலை தெருவில் Sastra Sanjeevini Press, Book Sellers and Publishers “சாஸ்திர ஸஞ்சீவிநீ பிரஸ்” ESTD 1900 என்ற பெயர்பலகை தாங்கிய ஒரு பழைய வீட்டைப் பார்த்தேன். பல போட்டோக்களும் எடுத்தேன், அப்பொழுது அந்த பிரஸ் குறித்து எதுவும் தெரியாது. பிறகு வேறு தகவல்களை தேடுகையில் இந்த பிரஸ் ஆரம்ப காலகட்டங்களில் சாஸ்திர நூல்களை அச்சிட்டு வழங்கியுள்ளது. மேலும் தங்கசாலை தெரு குறித்த பல சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன.
தமிழ் மொழியில் சிறப்பான உரைநடைகள் வளர்வதற்கு மிகவும் உறுதுணையாக நின்ற ஆறுமுக நாவலர், பெரிய அச்சு இயந்திரத்தை வாங்கி இந்த தெருவில் தான் 1860-ம் ஆண்டு ”வித்தியானுபாலன இயந்திரசாலை” என்ற அச்சகம் நிறுவிப் பல நூல்களையும் அச்சிட்டுள்ளார். இலக்கண நூல்கள் மற்றும் சங்க இலக்கியங்களை பிழையின்றி பதிப்பித்து கொடுத்துள்ளது இவருடைய அச்சகம்.
தி இந்து பத்திரிக்கை, அன்று வாரத்தில் மூன்று முறை தான் அச்சில் ஏறியது. தி இந்து பத்திரிக்கை 1880-ம் ஆண்டு இந்த தெருவில் இருந்த அச்சகத்தில் இருந்து அச்சாகி தான் மக்களை சென்றடைந்ததுள்ளது. ஆனந்த விகடனும் ஆரம்ப காலத்தில் இங்கு தான் அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளது.
"தங்கசாலை தெரு என்கிற மிண்ட் ஸ்ட்ரீட்” குறித்து இன்னும் பல சுவாரசியமான தகவல்கள் நீள்கின்றது.
#தங்கசாலை தெரு, #மிண்ட் ஸ்ட்ரீட், #சாஸ்திர ஸஞ்சீவிநீ பிரஸ், #Sastra Sanjeevini Press, Book Sellers and Publishers, #ஆறுமுக நாவலர், #வித்தியானுபாலன இயந்திரசாலை, #தி இந்து, #ஆனந்த விகடன்




Thanks and Courtesy: Books and Online Resources


Wednesday, April 14, 2021

ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம் (தோற்றுவித்த ஆண்டு 1914)

வடசென்னை, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரிக்கு அருகில் இருக்கிறது ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம் (தோற்றுவித்த ஆண்டு 1914) சித்தர்களில் ஒருவராக அறியப்படும் இவர், ‘ஆனந்தாசிரமம்’ என்ற சாது சங்கத்தை அமைத்து, பலரது அஞ்ஞானத்தைப் போக்கியிருக்கிறார்.

எனது கல்லூரி காலங்களில் தேர்வுகளுக்குப் படிக்கப் பேரமைதி நிலவும் இந்த மடாலய வளாகத்திற்கு சென்று தினமும் பல மணி நேரங்கள் படிப்பது வழக்கம். அப்பொழுது இந்த மடாலயத்தின் வரலாறு, சிறப்புகள் குறித்துத் தெரியாது. தற்பொழுது சில ஆய்வுகளைச் செய்து வரும் நிலையில் இம்மடாலயம் குறித்த பல அறிய தகவல்களை அறிந்தேன். சில நாட்களாக இம்மடாலயத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது. இன்று காலை இம்மடாலயத்திற்கு செல்லும் வாய்ப்பு தானாகவே உருவாகியது. பெரும் சிவாலயமாக உருவாகியிருக்கும் சுவாமிகளின் ஜீவசமாதியைத் தரிசித்தேன். பெரும் மன அமைதியை அளித்தது.
வடசென்னை, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரிக்கு எதிரில் சாமியார் தோட்டம் முதல் தெருவினுள் சிறிது தூரம் சென்றால் சுவாமிகளின் ஆலயத்தை தரிசிக்கலாம்.