Saturday, April 17, 2021

கோழி மார்கெட் என்கிற மஸ்கான்சாவடி சந்தை

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது என்பது தான் இந்த சந்தையின் அடையாளம்

.சென்னை, பிராட்வேயின் மத்தியில் இருக்கிறது அம்மன் கோவில் தெரு இதன் இரண்டு பிரதான தெருக்களை இணைக்கும் ஒற்றைச் சாலை தான் கோழி மார்கெட் என்று அழைக்கப்படுகிற மஸ்கான் சாவடி சந்தை. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி 12 மணிக்குள்ளாக பலர் இந்த தெருவில் கூடி பந்தயக்களுக்கென்றே பழக்கப்பட்ட ஓமர், சாதா, சப்ஷா, கிறிசில், ஆடல் புறாக்கள். பல வகை வகையான வளர்ப்புப் பறவைகள், வண்ண மீன்கள், கோழிகள், முயல்கள், கூண்டுகள், தீனிகள் போன்றவற்றை விற்பனை செய்கிறார்கள்.
பிரிட்டிஷ் காலத்தில், ஆங்கிலேயர்கள் தங்களின் கோழி இறைச்சி தேவைகளுக்காக இந்த சந்தையை உருவாக்கியிருக்கிறார்கள். சென்னையின் பல பகுதிகளிலிருந்து மக்கள் இந்த சந்தைக்கு வந்து கோழிகளை விற்றுச் செல்வார்களாம். கோழிச்சந்தையாக இருந்த இந்த சந்தை இப்போது வளர்ப்புப் பிராணிகள் சந்தையாக மாறியிருக்கிறது.
சென்னையில் பணிபுரிந்த சில ஆங்கிலேயே அதிகாரிகள், புறா வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்துள்ளார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பகுதிக்கு வந்து, புறாக்களை பறக்க விட்டு பந்தயம் நடத்தியிருக்கிறார்கள். அதைப் பார்த்து அப்பகுதி மக்களும் புறாவுக்கு ரசிகர்கள் ஆகி இருக்கிறார்கள். இன்றும், வடசென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது புறா வளர்ப்பும், பந்தயமும்.
#சென்னை, #வடசென்னை, #சென்னை வரலாறு #பிராட்வே, மன்னடி#கோழி மார்கெட், #மஸ்கான்சாவடி சந்தை, #பழமையான மார்கெட், #செல்லப்பிராணிகள் #புறா பந்தயம்.








Thanks and Courtesy: Books and Online Resources


No comments:

Post a Comment