Wednesday, April 14, 2021

ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம் (தோற்றுவித்த ஆண்டு 1914)

வடசென்னை, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரிக்கு அருகில் இருக்கிறது ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம் (தோற்றுவித்த ஆண்டு 1914) சித்தர்களில் ஒருவராக அறியப்படும் இவர், ‘ஆனந்தாசிரமம்’ என்ற சாது சங்கத்தை அமைத்து, பலரது அஞ்ஞானத்தைப் போக்கியிருக்கிறார்.

எனது கல்லூரி காலங்களில் தேர்வுகளுக்குப் படிக்கப் பேரமைதி நிலவும் இந்த மடாலய வளாகத்திற்கு சென்று தினமும் பல மணி நேரங்கள் படிப்பது வழக்கம். அப்பொழுது இந்த மடாலயத்தின் வரலாறு, சிறப்புகள் குறித்துத் தெரியாது. தற்பொழுது சில ஆய்வுகளைச் செய்து வரும் நிலையில் இம்மடாலயம் குறித்த பல அறிய தகவல்களை அறிந்தேன். சில நாட்களாக இம்மடாலயத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது. இன்று காலை இம்மடாலயத்திற்கு செல்லும் வாய்ப்பு தானாகவே உருவாகியது. பெரும் சிவாலயமாக உருவாகியிருக்கும் சுவாமிகளின் ஜீவசமாதியைத் தரிசித்தேன். பெரும் மன அமைதியை அளித்தது.
வடசென்னை, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரிக்கு எதிரில் சாமியார் தோட்டம் முதல் தெருவினுள் சிறிது தூரம் சென்றால் சுவாமிகளின் ஆலயத்தை தரிசிக்கலாம்.

1 comment: