சில தினங்களுக்குமுன் சென்னையிலுள்ள மிண்ட் ஸ்ட்ரீட்’ என்று அழைக்கப்படும் தங்கசாலை தெருவிற்கு செல்ல நேர்ந்தது. மிண்ட் ஸ்ட்ரீட், பழைய ஜெயில் சாலையில் துவங்கி, சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு அருகிலுள்ள பார்க் டவுனில் வரை நீண்டிருக்கும் சென்னையின் பழமையான மற்றும் மிக நீளமான தெரு.
தங்கசாலை தெருவில் Sastra Sanjeevini Press, Book Sellers and Publishers “சாஸ்திர ஸஞ்சீவிநீ பிரஸ்” ESTD 1900 என்ற பெயர்பலகை தாங்கிய ஒரு பழைய வீட்டைப் பார்த்தேன். பல போட்டோக்களும் எடுத்தேன், அப்பொழுது அந்த பிரஸ் குறித்து எதுவும் தெரியாது. பிறகு வேறு தகவல்களை தேடுகையில் இந்த பிரஸ் ஆரம்ப காலகட்டங்களில் சாஸ்திர நூல்களை அச்சிட்டு வழங்கியுள்ளது. மேலும் தங்கசாலை தெரு குறித்த பல சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன.
தமிழ் மொழியில் சிறப்பான உரைநடைகள் வளர்வதற்கு மிகவும் உறுதுணையாக நின்ற ஆறுமுக நாவலர், பெரிய அச்சு இயந்திரத்தை வாங்கி இந்த தெருவில் தான் 1860-ம் ஆண்டு ”வித்தியானுபாலன இயந்திரசாலை” என்ற அச்சகம் நிறுவிப் பல நூல்களையும் அச்சிட்டுள்ளார். இலக்கண நூல்கள் மற்றும் சங்க இலக்கியங்களை பிழையின்றி பதிப்பித்து கொடுத்துள்ளது இவருடைய அச்சகம்.
தி இந்து பத்திரிக்கை, அன்று வாரத்தில் மூன்று முறை தான் அச்சில் ஏறியது. தி இந்து பத்திரிக்கை 1880-ம் ஆண்டு இந்த தெருவில் இருந்த அச்சகத்தில் இருந்து அச்சாகி தான் மக்களை சென்றடைந்ததுள்ளது. ஆனந்த விகடனும் ஆரம்ப காலத்தில் இங்கு தான் அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளது.
"தங்கசாலை தெரு என்கிற மிண்ட் ஸ்ட்ரீட்” குறித்து இன்னும் பல சுவாரசியமான தகவல்கள் நீள்கின்றது.
your site is very informative. keep it up.
ReplyDelete